lundi 15 octobre 2007

என் பேருந்துப் பயணம்



















கண் தெரிந்தும் கண்ணாடி போட்டு கவர விரும்பும் ஓர் அழகன்
கண்ணிழந்தும் இருளில் கூட ஒளி தேடும் ஓர் மனிதன்
இயலாதவளுக்கு துணையாய்ச் செல்லும் ஈடில்லா ஒர் தோழி
பார்வையாலே பேசிக்கொள்ளும் நரைவிழுந்த காதலர்கள்
தொலைத்த வாழ்வை தொலைபேசியில் தேடுகின்ற ஓர் இளைஞன்
இப்படி இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள்
இவர்களுக்காகவே இன்னும் தொடர வேண்டும்
என் பேருந்துப் பயணம்

1 commentaires:

a dit…

உலகில் எத்தனை எத்தனை மணிதர்கள் - எவ்வளவு எண்ணங்கள் - அத்தனையும் அறிய வெண்டுமெனில் வாழ்க்கைப் பயணம் நீண்ட தாக இருக்க வேண்டும்