jeudi 12 juin 2008

திறமை needs விளம்பரம்















Tamil Youth Center As T Y C


தமிழ் இளைஞர்களின் ஆக்கங்கள் சேருமிடம்! எவ்வளவோ புதுப் புதுபாடல்கள்,
குறும்படங்கள், நமக்குத்தெரியாமல் இங்கே புதைந்து கிடக்கின்றன!



Eelam Artistes

இந்த தளம் தை மாசம் 2008 ஆரம்பிக்க பட்டது! திக்கு திக்காய் சிதறி இருக்கும் ஈழத்து கலைஞர்களை ஒன்று சேர்ப்பதே இந்த தளத்தின் நோக்கம்! நீங்கள் இங்கு இணைய விரும்பினால் உங்களைப் பற்றிய விபரங்களையும், நீங்கள் எந்த கலையைச் சாந்தவர்கள் என்பதையும் எழுதி அனுப்புங்கள்! smile.gif


...

mercredi 7 mai 2008

நான்‍‍கள் (குறும்படம்)


பிரான்ஸில், நல்லூர் ஸ்தான் கலைப்பிரிவு நடத்திய உலகளாவியரீதியிலான குறும்ப்படப்போட்டியில் முதாலம் பரிசு பெற்ற குறும்படம் இது! மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இந்தப் போட்டியில், இவ்வாண்டு மொத்தம் எட்டு குறும்படங்கள் இடம்பெற்றன! அதில் முதலாவது பரிசு பெற்ற "நான்கள்" குறும்படம் உங்கள் பார்வைக்காக!



நடிப்பு : அஜிந்தாஸ், சதாபிரணவன், ரமணா, றஜிந், கீதன்...

இசைக்கோர்வை : விக்ரம்

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு: டெசுபன்

தயரிப்பு : ற‌ஜிந்

எண்ணம்/ஆக்கம் : சதாபிரணவன்


இக் குறும்படப் போட்டியின் முழு விவரணத்தையும் பார்க்க இங்கே அழுத்தவும்

( நன்றி desu2.skyrock)

samedi 3 mai 2008

நான் செய்த‌ க்ளிக்(ஸ்)















jeudi 1 mai 2008

கனவோ...இது நினைவோ

















கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது

நிலவோடு பிறந்தவள்




















நிலவோடு பிறந்தவள் இவளோ...
நினைவினிலே வாழ்பவள் இவளோ...
அழகான ரோஜா இவளோ...

அதிலுள்ள தேனும் இவளோ...


குறுகுறுன்னு எனைப் பார்த்து...
குழந்தையென மாற்றியே விட்டாய்

துறுதுறுன்னு நடந்தே விழுந்து...
தோள்களிலே சாய்ந்தே அழுவாய்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்

அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!

(நிலவோடு)


இரவிரவாய் உனை நானும்...
இமைக்காமல் பார்த்து இருப்பேன்
இடையிடையே பூப்பூக்கும்...
இதழ்களை நான் ர‌சித்தே இருப்பேன்

கதையென்று சொல்லிவிட்டு கண்கள் மூடித் தூங்குகின்றாய்
அதை நானும் நிறுத்திடும் போது அடுத்த கணமே விழித்திடுகின்றாய் (x2)


என்னடி என்னடி நான் பாவம்...

என்னுயிர் கொல்லுது உன் கோபம்!

dimanche 20 avril 2008

நீ போன (சு)வடு!


கண்ணீர்த்துளிகள் மட்டும் என்னை வாழ வைக்குமா
காணும் கனவுகளே என்னை இனிமையாக்குமா

உன் நினைவுகள் மட்டும் நெருங்கிய சொந்தமாய்
நித்தமும் என்னை வாட்டுது
உன் சிரிப்புக்களும் கூர்ப்பார்வைகளும்
ஏன் ஊற்றாய் நுழைந்து உயிர் சிதைக்குது

என் தூக்கம் எங்கோ தொலைந்துபோக...
உன் முகமும் என்னை முழுசாய் ஆள...
நீ மீண்டும் வருவாயா? சொல்லு
ஒவ்வொரு காலையும் உனக்காய் விடியுது
ஒவ்வொரு மாலையும் உன்னைத் தேடுதே...

என் காதலை நம்பியே...
நானும் நிஜமாய் இருந்தேன்...
உன்னை நிழலாய்த் தொடர்ந்தேன்

என் உணர்வுகள் இங்கு மூடவில்லை,
உணர்ச்சிகளும் சாகவில்லை

நீயிங்கு இல்லாமல், நான் ஏனோ தனியாக...


என் வாழ்வில் ஏன் இந்தக் காயம் தந்தாய் ?
என் காதலில் ஏன் இந்த வலியைத் தந்தாய் ?
சொல்லேன்

நீ என்னை விரும்பவில்லையா ?
என் காதல் உண்மையில்லையா?

உன்னை நான் மறக்கவா இல்லை... வெறுக்கவா

ஒவ்வொரு நாட்களும் புதுப்புது வேதனை,
நான் என்ன செய்ய?

என்னையேன் தனியே விட்டு விலகிச் செல்கிறாய்
இதயம் அறுந்த காதல் இங்கு வாழுமா
நாட்கள் நகரவே விலகி ஓடுமா..சாகுமா

உந்தன் வார்த்தை என்னை நோகடித்து சாகடிக்க
நான் என்ன செய்தேன் காதல் வந்து தீயை மூட்ட
நீ போன வடு மாறுமா, ...இதயம் வலிக்கின்றதே
என் காதல் இன்னும் காத்திருக்கவா,
இல்லை காற்றில் மறையவா..
சொல்லேன்


உன் மூச்சின் வெப்பம் சேராமல் என்னுயிரும் வாழாது
உன் பார்வை வீசாமல் என் உடலும் தேறாது
நாட்கள் மெல்ல நகர நகர
நானும் உன்னைத் தொலைப்பேனோ

நானும் உன்னை விரும்ப விரும்ப
நீயும் என்னை வெறுப்பாயோ


இந்த அழகிய காதல் என்னை அவஸ்தைக்குள்ளாக்கியதே
அந்த அறியா வார்த்தைகளோ என் இதயம் கீறியதே

என் காதல் தனியாக ...அதற்குள் நான் கைதியாக...

"கசப்பான" உண்மை




















மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...

அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்

நட்போடு
தயா

mardi 25 mars 2008

1 தலைக் காதல்














நீ
என்னை விரும்ப வேண்டாம்

"நான் உன்னை விரும்பினேன்"

என்பதை மட்டும் அறிந்து விடு





















"நீ யார்?

உன் பெயர் என்ன?
ஏதாவது தெரியுமா அவனுக்கு?
இதுவரை பேசியதில்லை
ஏன் சிரித்தது கூட இல்லை
இப்படி இருக்கையில்
உனக்கு அவன் மீது காதலா?
முட்டாளே! யோசி!"
ஆயிரம் தடவை கேட்டதே ஒரு குரல்!
ச்சீ...அவசரப்பட்டுவிட்டேனே!
பிடிவாதக்காரி நான்!

கிறுக்கல்


என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்...

dimanche 16 mars 2008

புதையல் நீ




















ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போய்
உதடுகளில் மறைத்து வைத்திருந்தும்
முடியாமல்...
கோழை ஆகி...

எனக்குள்ளே தவித்த நாட்களை
இன்று நினைக்க...
என்னையே நொந்து சிரிக்கிறேன்!
உண்மையான அர்த்தம் தெரியாமல்
உனக்காய் காத்திருந்து
வெறுமையாய் கழித்த தருணங்களை...
இன்று தேடி அலைகிறேன்
நான் இப்படி என்பதால் நீயும் அப்படியே என்று
கனவில் மட்டுமே வாழ்ந்திருந்தேன்!
ஆனாலும்...
அப்படி இருந்ததினாலோ என்னவோ
என் மீது பல மாற்றங்கள்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தேவையென எதையும் கேட்டதில்லை
இருந்தும்...
எனக்கேயான பாதையை நீ காட்டினாய்
சோகங்கள் வந்த போது
விலக கற்றுத் தந்தாய்
சுகங்கள் வந்த போது
ரசிக்கச் செய்தாய்
உன் நினைவில் வாழ்ந்த
"அந்த வருடங்கள்"

எவருக்கும் தெரியாவிட்டாலும்
எனக்குள் தந்த வருடலை...
இதுவரை சொல்ல நினைத்தும்

முடியவில்லை!
வெளியில் சொல்ல நினைத்தாலும்
வார்தைகள் ஏனோ சரியாய் இல்லை...
போகட்டும்!
நீ இருக்கும் போதே...
எவரிடமும் சொல்ல நினைத்தில்லை

இப்பொழுது மட்டும்!... ஏன்?

என்னுள்ளே மூழ்கிப் போன நினைவாய் நீ!
வெளியில் சொல்லும் போது...
எதையோ இழக்கிறாயே!
ஏன்?
அதனால்...
எப்பொழுதும் புதைந்தே இரு!
ஒரு புதையலைப் போல.

mercredi 12 mars 2008

உனக்காக

தோன்றத மட்டும் எழுதணும் என்று முடிவு பண்ணிய போது.....(கவிதை இல்லை)






முதல் பார்வையில்
உன்னை எல்லோருக்கும் பிடிக்குமாம்
அதை நீயே சொல்லித்தான் தெரிந்தது எனக்கு
ஆனால் எனக்கு அப்படியல்ல
உன் முகத்தைப் பார்த்ததும்
இப்படித்தான் இருப்பான் என்று எடை போட்டது மனது
-எல்லாம் போய்
இப்படி இருக்கின்றானே என்று எண்ணத் தோன்றுது இன்று
மற்றவர்களிடம் நீ எப்படியோ ?
ஆனால் என்னிடம் இப்போது நீ இப்படித்தான்!
எல்லா மனிதர்களைப் போலவும்
நீ...என்றோ விலகிச் செல்வாய் என்று தெரிந்திருந்தும்
இன்று உன்னோடு செல்லும் காலத்தை மட்டும் நேசிக்கின்றேன்!
நான் சந்தித்த மனிதரில் நீயும் ஒருவனாய்
கொஞ்சம் புதுமையாய்...
கொஞ்சம் தோழனாய்...
இருந்தும் வருந்திக்கொள்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காய் வரும் அந்த ஒருத்திக்காய்!
ம்ம்ம்...என்ன பாவம் செய்தாளோ ?
ஆனாலும்...
எங்கிருந்தோ வாழ்த்துவேன்

உனக்காக...மட்டும்
ஓர் அன்புத் தோழியாய்!

jeudi 6 mars 2008

என்னிடம் சொல்வாயா?


நேராக வருவாயா?
உன் காதலைச் சொல்வாயா?
நானாக இருப்பேனா ? - இல்லை
நீயாகத் தெரிவேனா ?

கைகளால் விலங்கு பூட்டி.. -உன்
கண்களால் தூண்டில் போட்டு...
காதலைச் சொல்வாயா?
என்னிடம் சொல்வாயா?

இதுவரை எங்கிருந்து எனை வதைத்தாய்...நீ
இன்றுன் விழிகளிலே சிறை வைத்தாய்?

ஒரு நொடி உனை நான் பார்த்தால்..
உணர்வுகள் உறைந்தே தான் போகும்...
காதல் தேடிய கண்கள் இன்றுனைக் கண்டது...
காலமும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டது...

கண்ணில் விழுந்த மழைத்துளி நீதான்
நெஞ்சில் கலந்த இசைத்துளி நீதான்
என்னுள் படர்ந்த ஓவியம் நீதான்
நீதான்....நீயே தான்!!

உன் நினைவினில் தூங்கையில்
உளரல்கள் கூட கவிதை தான்
உன் நிஜம் எது...நிழல் எது...
இரண்டிலும் கலந்திட்ட குழப்பம் நான்
-...ம்ம் நானே தான்!

samedi 26 janvier 2008

கனவில் அவன்


ஒவ்வொரு காலையும் விழிக்கும் போது
நான் தொலைத்தது
என் கனவை மட்டுமல்ல
அதில் வாழும் உன்னையும் தான்!

-------------------------------

சீக்கிரமாக உறங்குகிறேன்
நேற்றிரவு நீ வந்த கனவு
இன்றும் தொடராதா என்று!

இது ஞாயமா?


நீ தூங்குவதை ரசிப்பதற்காக
என் தூக்கத்தை கலைத்தாயே
இது ஞாயமா?

முதல் கவி

உன்னில் தோன்றியவையை
எழுத்தில் வடி
எனக்காய் நீயிட்ட ஆணை இது
அதனால் தோன்றியது
என் முதல் கவி !

mercredi 23 janvier 2008

நேசித்தது

நான் நேசித்தது உன்னை மட்டுமல்ல...
உன் வீட்டு நாய்க்குட்டியையும் தான்!

வாழ்த்து அட்டைகள்


எத்தனையோ நாட்கள் கடந்தும்
உனக்காய் எழுதிய வாழ்த்து அட்டைகள்
இன்னும் என்னிடத்தில் தான்...

நீ ஒருவன்

நான் வியந்த மனிதரில் நீயும் ஒருவன்
அன்பானவனாய்...
அழகானவனாய்...
துணையானவனாய்...
என்னவனாய்...
நண்பனாய்...!!!

மோதல்


இரவிரவாய்
எனக்கும் என் பேனாவுக்கும் மோதல்
யார் உன்னை அதிகம் நினைப்பது என்று