vendredi 30 novembre 2007

திருவிழா


இந்த அலங்காரதுக்காகவாவது வேண்டும்
ஒவ்வொரு நாளும் நம்மூரில்
கோவில் திருவிழா

lundi 19 novembre 2007

நினைவுகள்

நான் உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
ஆனால் உன் நினைவுகளோ மறந்தும் மறையவில்லை

mardi 13 novembre 2007

அனாதை இதயம்


ஏதோ ஒரு மூலையில்
அனாதையாய் என் இதயம் !
உன் பதிலை எதிர்பார்த்தபடி

dimanche 11 novembre 2007

யாரவன் ?


இயல்பாய் பேசிக்கொண்டிருக்கையில்
இடையில் ஒரு சலனம்
யாரவன் ?
எங்கேயோ இருந்து கொண்டு
எனக்கின்பம் அளிப்பவன்
ஏதோ துணையாய் கிடக்க
அதன் மேல் சாய்ந்தேன் ஆதரவு தேடி
கண்கள் விழித்தே இருந்தும்
கனவு காணத்தொடங்கினேன்
கற்பனை கலந்த கனவு அது!
ஏதேதோ ஆசைகள் வந்து அலைமோத
ஆழ்ந்த சிந்தனையிலும்
என் உதட்டில் ஓர் புன் சிரிப்பு
முகம் தெரியாதவனுக்காய்
முழுதாக உறைந்திருந்தேன்

dimanche 4 novembre 2007

காத(ற்)கொலை















உன் கதை கேட்ட போது

உணர்ச்சிவசப்பட்டவர்களில் நானும் ஒருத்தி
என்னதான் நீ அவளைக் காதலித்திருந்தாலும்
உன் காலத்தை முடிப்பதற்காய்
நீ எடுத்த முடிவு தவறே
உன் காதலை புரியவைக்கத் தெரியாத உன்னை என்னென்று சொல்ல
உன்னை புரிய முயற்சி செய்யாத அவளை என்னென்று சொல்ல
அதை விடு
காதல் வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமே
அதற்காக உன்னையே நீ அழிக்கத்துணிந்தாய்
ச்சீ...உன்னையே வாழவைக்கத்தெரியவில்லை
அதனால் அந்த துணிச்சல் கூட ஒரு கோழை தான்
நீ ஒரு நொடியில் எடுத்த முடிவால்
இன்று நொந்து கொள்பவர் எத்தனை பேர்
உன்னை விரும்பாத ஒரே காரணத்துக்காய்
ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் "அவள்"
உன்னையே வழி நடுத்தத் தெரியாமல் "நீ"
இதில் காதல் என்ன செய்யும் ?
அது வாழவைக்குமே தவிர சாகடிக்காது
உன் காதல் கிட்டவில்லை..சரி
உனக்காய் வாழப்பிடிக்கவில்லையா
உன் பெற்றோருக்காவது வாழ்ந்திருக்கலாம்
உணர்ச்சிகள் பொங்க உடன் எடுத்த முடிவு
நீ ஒரு நிமிடம் யோசித்திருந்தால்...
இன்று நான் எங்கேயோ இருந்துகொண்டு
உனக்காக பேனா பிடித்திருக்க நேர்ந்திருக்காது
உணர்ச்சிகளை வெல்லத்தெரியவில்லை நீ வீரனா ??
உன் போன்றவர்களின் கதை கேட்பது
இன்றே இறுதியாக இருக்கவேண்டும்