mardi 25 mars 2008

1 தலைக் காதல்














நீ
என்னை விரும்ப வேண்டாம்

"நான் உன்னை விரும்பினேன்"

என்பதை மட்டும் அறிந்து விடு





















"நீ யார்?

உன் பெயர் என்ன?
ஏதாவது தெரியுமா அவனுக்கு?
இதுவரை பேசியதில்லை
ஏன் சிரித்தது கூட இல்லை
இப்படி இருக்கையில்
உனக்கு அவன் மீது காதலா?
முட்டாளே! யோசி!"
ஆயிரம் தடவை கேட்டதே ஒரு குரல்!
ச்சீ...அவசரப்பட்டுவிட்டேனே!
பிடிவாதக்காரி நான்!

கிறுக்கல்


என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்...

dimanche 16 mars 2008

புதையல் நீ




















ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போய்
உதடுகளில் மறைத்து வைத்திருந்தும்
முடியாமல்...
கோழை ஆகி...

எனக்குள்ளே தவித்த நாட்களை
இன்று நினைக்க...
என்னையே நொந்து சிரிக்கிறேன்!
உண்மையான அர்த்தம் தெரியாமல்
உனக்காய் காத்திருந்து
வெறுமையாய் கழித்த தருணங்களை...
இன்று தேடி அலைகிறேன்
நான் இப்படி என்பதால் நீயும் அப்படியே என்று
கனவில் மட்டுமே வாழ்ந்திருந்தேன்!
ஆனாலும்...
அப்படி இருந்ததினாலோ என்னவோ
என் மீது பல மாற்றங்கள்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தேவையென எதையும் கேட்டதில்லை
இருந்தும்...
எனக்கேயான பாதையை நீ காட்டினாய்
சோகங்கள் வந்த போது
விலக கற்றுத் தந்தாய்
சுகங்கள் வந்த போது
ரசிக்கச் செய்தாய்
உன் நினைவில் வாழ்ந்த
"அந்த வருடங்கள்"

எவருக்கும் தெரியாவிட்டாலும்
எனக்குள் தந்த வருடலை...
இதுவரை சொல்ல நினைத்தும்

முடியவில்லை!
வெளியில் சொல்ல நினைத்தாலும்
வார்தைகள் ஏனோ சரியாய் இல்லை...
போகட்டும்!
நீ இருக்கும் போதே...
எவரிடமும் சொல்ல நினைத்தில்லை

இப்பொழுது மட்டும்!... ஏன்?

என்னுள்ளே மூழ்கிப் போன நினைவாய் நீ!
வெளியில் சொல்லும் போது...
எதையோ இழக்கிறாயே!
ஏன்?
அதனால்...
எப்பொழுதும் புதைந்தே இரு!
ஒரு புதையலைப் போல.

mercredi 12 mars 2008

உனக்காக

தோன்றத மட்டும் எழுதணும் என்று முடிவு பண்ணிய போது.....(கவிதை இல்லை)






முதல் பார்வையில்
உன்னை எல்லோருக்கும் பிடிக்குமாம்
அதை நீயே சொல்லித்தான் தெரிந்தது எனக்கு
ஆனால் எனக்கு அப்படியல்ல
உன் முகத்தைப் பார்த்ததும்
இப்படித்தான் இருப்பான் என்று எடை போட்டது மனது
-எல்லாம் போய்
இப்படி இருக்கின்றானே என்று எண்ணத் தோன்றுது இன்று
மற்றவர்களிடம் நீ எப்படியோ ?
ஆனால் என்னிடம் இப்போது நீ இப்படித்தான்!
எல்லா மனிதர்களைப் போலவும்
நீ...என்றோ விலகிச் செல்வாய் என்று தெரிந்திருந்தும்
இன்று உன்னோடு செல்லும் காலத்தை மட்டும் நேசிக்கின்றேன்!
நான் சந்தித்த மனிதரில் நீயும் ஒருவனாய்
கொஞ்சம் புதுமையாய்...
கொஞ்சம் தோழனாய்...
இருந்தும் வருந்திக்கொள்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காய் வரும் அந்த ஒருத்திக்காய்!
ம்ம்ம்...என்ன பாவம் செய்தாளோ ?
ஆனாலும்...
எங்கிருந்தோ வாழ்த்துவேன்

உனக்காக...மட்டும்
ஓர் அன்புத் தோழியாய்!

jeudi 6 mars 2008

என்னிடம் சொல்வாயா?


நேராக வருவாயா?
உன் காதலைச் சொல்வாயா?
நானாக இருப்பேனா ? - இல்லை
நீயாகத் தெரிவேனா ?

கைகளால் விலங்கு பூட்டி.. -உன்
கண்களால் தூண்டில் போட்டு...
காதலைச் சொல்வாயா?
என்னிடம் சொல்வாயா?

இதுவரை எங்கிருந்து எனை வதைத்தாய்...நீ
இன்றுன் விழிகளிலே சிறை வைத்தாய்?

ஒரு நொடி உனை நான் பார்த்தால்..
உணர்வுகள் உறைந்தே தான் போகும்...
காதல் தேடிய கண்கள் இன்றுனைக் கண்டது...
காலமும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டது...

கண்ணில் விழுந்த மழைத்துளி நீதான்
நெஞ்சில் கலந்த இசைத்துளி நீதான்
என்னுள் படர்ந்த ஓவியம் நீதான்
நீதான்....நீயே தான்!!

உன் நினைவினில் தூங்கையில்
உளரல்கள் கூட கவிதை தான்
உன் நிஜம் எது...நிழல் எது...
இரண்டிலும் கலந்திட்ட குழப்பம் நான்
-...ம்ம் நானே தான்!