samedi 17 mars 2007

உயிருக்குள் உறைந்தது


உயிருக்குள் உறைந்தது எழுந்து வழியுதே
உனைதனைப் பார்த்ததும் எழுதச் சொல்லுதே
சிறு சிறு கணத்திலும் வாழ்க்கை இனிக்குதே
சிறகில்லா மனம் கூட வானைத்தாண்டுதே

தொலைவினில் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது
தொல்லைகள் துயரங்கள் எங்கோ தொலைந்தது
விழிகளில் இமையோ இசையாய் துடிக்குது
வித விதமாய் பல கனவுகள் பிறக்குது

உதடுகள் என்றும் உன் பெயர் சொல்லுதே
உறக்கத்தில் கூட உன்னை அழைக்குதே
குறுகுறுப்பார்வைகள் என்னுயிர் கொல்லுதே
கூட்டத்தில் உன்னை என் மனம் தேடுதே

உன் குரல் கேட்கையில் உயிரில் ராகங்கள்
உன்னுடல் தீண்டலில் உருகும் பாடல்கள்
உன்னெதிரே வருகையில் உலகம் என் கையில்
உருவம் இல்லா இந்த உணர்வுதான் என்னவோ ?

என் தவறு எங்கே ??

ஏதோ ஒரு நினைப்பில் எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு : "விவாகரத்து செய்தவரின் குழந்தைகளின் உணர்வுகள் எப்டி இருக்கும்?" என்று
அப்போ கிறுக்கிய ஒன்று உங்கள் பார்வைக்கு.



என் தவறு எங்கே ??

ஏன் அன்று நான் பிறந்தேன்
இவர் காதல் விதையாக?
ஏன் இன்று நான் விரிந்தேன்
இரு சோக கிளையாக?

எந்தன் தவறு எங்கே... எங்கே?

திருமணத்தில் அன்று இணைந்து
இருமனமாய் இன்று பிரிந்தீர்...
வெறும் மனமாய் தவிக்கும் பிள்ளை
உங்கள் விழிதனிலே தேடுகிறேன்...

எந்தன் தவறு எங்கே.. எங்கே?

நேற்று வாழ்ந்தது தாயின் வீட்டில்!
நாளை வாழ்வது தந்தை வீட்டில்!
தனிக்குழந்தை நானோ
-எனக்கு
இரு மனைகள், புரியவில்லை!

எந்தன் தவறு எங்கே... எங்கே?

பிரிவின் காரணம் என்ன என்றால்
உரிமை என்று பதிலும் வருது!
எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்
எனது உரிமை இங்கு எங்கே...எங்கே?

எந்தன் தவறு எங்கே... எங்கே?

mercredi 7 mars 2007

கனவா என்று கண்ணைக் கேட்டேன்

mardi 6 mars 2007

நெரிசலின் நடுவில்...


பேருந்தில்,
நெரிசலின் நடுவில்...
நீயும், நானும்...
ஒருவர் எதிரில் ஒருவராக...
ஒன்றாக...
சுவாசம் இரண்டும் ஒன்றையொன்று மோதிட...
தூண்டில் விழிகள் சண்டை போட்டு இழுக்க...
இடையிடையே சில வார்த்தைகள்...
பலதடவை இதழ்கள் மலர...
பேருந்து முழுவதும் ஏதேதோ சலசலப்பு
நாம் இருவரும் அமைதியில் தவழ...
ஆனாலும் பேசினோம்
பார்வையால்...
மௌனத்தால்...
தீண்டலால்...

lundi 5 mars 2007

உன் பெயர்