
இந்த ஒரு பார்வைக்கு
அகராதியில் கூட இல்லை
இவ்வளவு அர்த்தங்கள்
அகராதியில் கூட இல்லை
இவ்வளவு அர்த்தங்கள்

நாம் பேசுவது தீர்ந்த பின்னும்
நம் மௌனங்கள் தொடர்கின்றன
நம் மௌனங்கள் தொடர்கின்றன

கனவுகளில் வாழ்ந்தவன்
என் கண்முன்னே நின்ற போது
நிஜங்களையும் நம்பாமல்
நேரிலேயே கனவு கண்டேன்
என் கண்முன்னே நின்ற போது
நிஜங்களையும் நம்பாமல்
நேரிலேயே கனவு கண்டேன்

இந்த உலகத்தை பார்த்த போதல்ல
உன்னைப் பார்த்த போது தான்
-நான் அறிந்தேன்
கண்களின் அருமையை
உன்னைப் பார்த்த போது தான்
-நான் அறிந்தேன்
கண்களின் அருமையை


3 commentaires:
ஆ..ஆ... எப்புடி உங்கலால மட்டும் இப்படி எல்லம் எலுத முடியுது?
படங்களுக்கு ஏற்ற கவிதை வரிகள்
சூப்பரா இருக்குதுங்கோ ...
எங்க ஊர் ஸ்டைலிலே சொன்னேங்கோ ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
Enregistrer un commentaire