vendredi 12 octobre 2007

இது மலர்கள் தூங்கும் நேரமா
























இது மலர்கள் தூங்கும் நேரமா
இந்த நிலவு தூங்கும் நேராமா
என் இமைகளின் துடிப்பு
உன் இரவினைத் தொலைக்குமா
என் இதழ்களின் பாடலோ
உன் கனவினைத் தீண்டுமா
அதிகாலை விடியும் வரை
அசையாது பார்த்திருப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
உன் கனவோடு சேர்ந்திருப்பேன்

காற்றோடு உன் கூந்தல்
கலையத்தான் விடுவேனா
கண்ணோடு உன் இமையும்
பிரியத்தான் விடுவேனா
இரவிரவாய் உனை நானும்
இமைக்காமல் ரசித்திருப்பேன்
இதயத்தின் ஓசைகளை
உயிர்வரையில் கேட்டிருப்பேன்

என் தூக்கம் தொலைத்து நானோ
உன் விரல்கள் வருடிடுவேன்
தொல்லை மறந்து நீ தூங்க
தோளாக நான் இருப்பேன்
சுவாசிக்க நீ மறந்தால்
காற்றோடு நான் கலப்பேன்
அழகான உன் முகத்தை
அழியாமல் பார்த்திருப்பேன்

2 commentaires:

a dit…

"என் தூக்கம் தொலைத்து நானோ
உன் விரல்கள் வருடிடுவேன்

தொல்லை மறந்து நீ தூங்க
தோளாக நான் இருப்பேன்

சுவாசிக்க நீ மறந்தால்
காற்றோடு நான் கலப்பேன்

அழகான உன் முகத்தை
அழியாமல் பார்த்திருப்பேன்"

அழகான கவிவரிகள்
ம்ம்.. எனக்குத்தான்
கவிதையாய் கதை
வருகிறது

தொடர்ந்தும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

a dit…

உறங்குவதைக்கூட இவ்வளவு அழகாகக் கூற முடியுமா - நம்ப முடிய வில்லை - அழகான் அருமையான கவிதை -வாழ்த்துகள்