dimanche 22 novembre 2009

ஆத்தா நான் மீண்டும் வந்துட்டேன்...

ரொம்ப நாளுக்குப் பிறவு என் பதிவலையை கொஞ்சம் தூசு தட்டலாமுன்னு வந்து இருக்கேன்...

இதுவரைக்கும் எந்த வலைப்பதிவுலையும் போடாத பதிவு இது : ( அப்படி யாராச்சும் போட்டவங்க பத்தி தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்). உண்மையை சொல்லணும் என்றால் இந்த பதிவுக்கு தலைப்பு "மெகா சீரியல்" என்று வைத்திருக்க வேண்டும் : நல்லா ஏமாந்தீங்களா...வந்துட்டீங்கல்ல...தொடர்ந்து படியுங்க!


இப்போ எல்லாம் புதுசா நான் ஒரு உலகத்தை ரசிக்க ஆரம்பிச்சு இருக்கேன் : அது தான் ASIAN DRAMAS.
என்ன பெருசா எங்க மெகா சீரியலை விட புதுசா இருக்கப்போகுது என்று தப்புக்கணக்கு போட்டுடாதீங்க...உண்மையை சொல்லப்போனால் ஆசியாவில் உள்ள தென்கொரியா, ஜப்பான், தாய்வான் நாடுகளில் திரைப்படங்களை விட இந்த "Mini-Dramas" தான் பிரபல்யமானவை... அழகானா கதைகள், அருமையான நடிகர்கள்...என்று எங்களுக்குத் தெரியாமல் நிறைய ஒழிந்திருக்கின்றன இங்கு.
எனக்குப் பொதுவாக மற்ற நாடுகளையும் விட, தென்கொரியா Dramaக்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்!

அதில் மிகவும் பிடித்த ஒன்று Coffee Prince

























என்னவென்று சொல்வது, எப்போதாவது கொஞ்சம் கவலையாக இருந்தேன் என்றால், இதில் சில காட்சிகளைப் பார்த்தால் போதும்...மறுபடியும் சிரிக்க ஆரம்பித்து விடுவேன்...







ஒன்றே ஒன்று மட்டும் சொல்றேன் : எல்லா காட்சிகளையும் அணு அணுவாய் ரசித்து எடுத்திருப்பார்கள்! :) பார்க்க விரும்பினீர்கள் என்றால் இங்கே அழுத்துங்கள்.

lundi 15 juin 2009

விழிகள் சிந்தும் துளிகள்




பாடகர்கள் : அன்ட்ரு, சதாபிரணவன்
பாடல் எழுதியவர் : சதாபிரணவன்
இசை : ஜனா
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : டெசுபன்
பங்குபெற்றவர்கள் : ப்ரான்ஸ் வாழ் தமிழ்க் கலைஞர்கள்

பாடலை நேரடியாக இணைக்க முடியவில்லை : இங்கே அழுத்துங்கள்

lundi 13 avril 2009

நட்பின் காதல் : குறும்படம்


ப்ரான்ஸில் "விழிகள்" தாயரிப்பின், முதல் முயற்சி இது!

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்

கதை & இயக்கம் : சதீஸ்

ஒளிப்பதிவு படத்தொகுப்பு : கேதாரன்

தயாரிப்பு : விழிகள்

2007-2008

jeudi 12 juin 2008

திறமை needs விளம்பரம்















Tamil Youth Center As T Y C


தமிழ் இளைஞர்களின் ஆக்கங்கள் சேருமிடம்! எவ்வளவோ புதுப் புதுபாடல்கள்,
குறும்படங்கள், நமக்குத்தெரியாமல் இங்கே புதைந்து கிடக்கின்றன!



Eelam Artistes

இந்த தளம் தை மாசம் 2008 ஆரம்பிக்க பட்டது! திக்கு திக்காய் சிதறி இருக்கும் ஈழத்து கலைஞர்களை ஒன்று சேர்ப்பதே இந்த தளத்தின் நோக்கம்! நீங்கள் இங்கு இணைய விரும்பினால் உங்களைப் பற்றிய விபரங்களையும், நீங்கள் எந்த கலையைச் சாந்தவர்கள் என்பதையும் எழுதி அனுப்புங்கள்! smile.gif


...

mercredi 7 mai 2008

நான்‍‍கள் (குறும்படம்)


பிரான்ஸில், நல்லூர் ஸ்தான் கலைப்பிரிவு நடத்திய உலகளாவியரீதியிலான குறும்ப்படப்போட்டியில் முதாலம் பரிசு பெற்ற குறும்படம் இது! மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இந்தப் போட்டியில், இவ்வாண்டு மொத்தம் எட்டு குறும்படங்கள் இடம்பெற்றன! அதில் முதலாவது பரிசு பெற்ற "நான்கள்" குறும்படம் உங்கள் பார்வைக்காக!



நடிப்பு : அஜிந்தாஸ், சதாபிரணவன், ரமணா, றஜிந், கீதன்...

இசைக்கோர்வை : விக்ரம்

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு: டெசுபன்

தயரிப்பு : ற‌ஜிந்

எண்ணம்/ஆக்கம் : சதாபிரணவன்


இக் குறும்படப் போட்டியின் முழு விவரணத்தையும் பார்க்க இங்கே அழுத்தவும்

( நன்றி desu2.skyrock)

samedi 3 mai 2008

நான் செய்த‌ க்ளிக்(ஸ்)















jeudi 1 mai 2008

கனவோ...இது நினைவோ

















கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது