mercredi 28 février 2007

வந்து விட்டாய்


வந்து விட்டாய் நீ வந்து விட்டாய்
என் வாழ்வில் ஏதோ செய்துவிட்டய்
என்ன செய்தாய் அட என்ன செய்தாய்
என்னையேன் இப்படி மாற்றிவிட்டாய்

குழந்தையின் குறும்பு இத்தனை அழகா
குடையில்லா மழையில் இத்தனை சுகமா
இசையுடன் பயணம் எத்தனை இனிமை
இருட்டினில் மட்டும் ஏன் இந்த தனிமை

கனவினில் உந்தன் முகம் கலையதா ஓவியம் போல்
தினசரி வந்து என்னை தித்திக்க வைப்பது ஏன்
எங்கோ தொலைந்த என் பார்வை
உன் கண்களைக் கண்டதும் மோதியதேன்

கனவுகளும் நினைவுகளும் கண்ணெதிரே தோன்றுதே
இனிக்காத்திருக்காத்திருக்க தேவயில்லை கண்கள் உனைக்கண்டதே
எதிரினிலே, என்னருகினிலே நீயிருந்தாய் போதுமே
இனி வேறெதுவும் தேவையில்லை எனக்கிது போதுமே

dimanche 25 février 2007

அஹா அதிகாலை!!!

அது ஓர் சுகம்...
நேரம் ஆகிவிட்டது என்று கடிகாரம் அலறினாலும்
என்னுடன் பிறந்தவன் அழைப்பில் எழும்புவதில் ...


எழுந்திரு எழுந்திரு எனும் கடிகாரத்தின் இம்சைக்கும்
படுத்திரு படுத்திரு எனும் மெத்தையின் கதகதப்பிலும்
மாட்டிக்கொண்டு தவிக்கும் மனசைப் பார்க்கையில்...



ஒப்பனை அற்ற முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு
என் கண்கள் அகல விரிந்து
ரசிக்குமே...


"ஜில்" என்று தண்ணீர்த்துளிகள்கண்மணித்துளிகளுடன் சந்திக்கும் அந்த நொடி தோன்றுமே ...


பனிக்காலத்தில் பள்ளி போய் சேர பேருந்தை நோக்கிப் பயணிக்கும் நம் கால்கள் போடும் தாளங்கள் ...


கதிரவன் எட்டிப்ப்பார்க்க தாய் புறா தன் குஞ்சுகளுக்கு இரை தேடி அலைய
குளிர் காற்று நம் இதயதை தொட்டுப்போக
அந்தரத்தில் தொன்கி துள்ளிகுதிக்குமே நம் மனசு...


பேருந்து ஜன்னல் அருகில் நண்பனின் அரட்டை
காது வரை நுளைய நம் உதட்டில் பூக்குமே
முதல் மலர்...


எங்கோ கற்றில் தவந்து வரும் கீதம்
நம் காதுகளுக்கு விருந்தாகி, நம் மனதில் படர்ந்து
இதயத்தை இதப்படுதுமே அக்கணம்...

இன்றாவது உனைக் காண்பேன்




என் தோழி வந்து உன் வருகை சொன்னதும்
நான் என்னவானேன் அக்கணத்தில் ஏதோ ஆனேன்...
என் மனசு யாவும் மழை தான் பொழிந்து
அணுக்கள் முழுதும் பசுமை ஆகின!
அந்தப் பொன்மாலைப் பொழுதில்
உனைக் கண்கள் தேடின!
காணவில்லையென்றதும்
துடிக்கத்தொடங்கின
-மறுபடியும்
வானம் வெளிக்குமே!
மனசு பதைக்குமே!
இன்றாவது உனைக் காண்பேன் என்று!!!

lundi 19 février 2007

யார் ?

dimanche 18 février 2007

சுட்டிப்பெண்ணே...
















நானும் என் அக்காவும் சேர்ந்து எழுதியது. "வல்லவன்" படத்தில் வரும் "லூசுப்பெண்ணே" பாடல் போல் இது "சுட்டிப்பெண்ணே" எங்க குட்டி ஒருத்தியின் பிறந்தநாளுக்காக: நீங்களும் பாருங்களேன்!!!


சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்கூடத்தான்
இருக்க விரும்பிறேன்

கண்கள் மூடி நீ தூங்கும் போதும்
என் விழிகள் ஏனோ உன்னை விட்டு நீங்க மறுக்குதே
-உன்னை ரசிக்கச் சொல்லுதே

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...
சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...


happy birthday பாடுறோம்
ஹரனிய வாழ்த்துறோம்

உன்னை நாமே உன்னை நாமே
வாழ்த்தி வாழ்த்தி பாடுறோம்
வாழ்த்தி வாழ்த்தி பாடுறோம்

உனக்கோர் பரிசை கொடுக்க நினைத்து
இப்பாட்டை நாம் பாடுறோம்
-ரொம்ப ஆசையாய்
உனக்கோர் பரிசை கொடுக்க நினைத்து
இப்பாட்டை நாம் பாடுறோம்
-ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டெழுத எமக்குத் தெரியலையே
உன்னைப் பத்திப் பாடாம தான் இருக்க முடியலையே

உன்னை நாம் திட்டத் திட்ட பார்த்தோம்...
மனசு இறங்கவில்ல
-எமக்கு
உன்னைத்திட்ட மனசே இல்ல


சுட்டிப்பெண்ணே... சுட்டிப்பெண்ணே...
தத்தி தத்தி.....சொக்க...வைக்கிற!

சுட்டி சுட்டிப்பெண்ணே... சுட்டிப்பெண்ணே...
சுட்டி சுட்டி பெண்ணே...
தத்தி தத்தி ஓடும்போது
சொக்க... சொக்க...சொக்க வைக்கிற

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்கூடத்தான்
இருக்க விரும்பிறேன்

கண்கள் மூடி நீ தூங்கும் போதும்
என் விழிகள் ஏனோ உன்னை விட்டு நீங்க மறுக்குதே
-உன்னை ரசிக்கச் சொல்லுதே

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...


சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

ஆசைகள்


ஆண்:
எத்தனை ஆசைகள் உன்னிடம்-அதை
ஒவ்வொன்றாய் சொல்லிடு நீ என்னிடம்
வெட்கத்தை இங்கேயும் அகற்றி-உயிரே
உன் உள்ளத்து தவிப்பை நீயும் இறக்கிடேன்

பெண்:
தனிமையில் இருக்கணும் உன்னோடு-அன்பே
தடையின்றி பேசணும் உன் கண்ணோடு
வரிகளால் செதுக்கிய ஓர் கவியோடு
உன் அழகினைப் பாடணும் என் குரலோடு

ஆண்:
கனவுகள் காணணும் உன் விழிதனில்-என்
நினைவுகள் சேரணும் அதன் ஒளிதனில்
பார்வைகள் ரெண்டும் மோதியே-இங்கு
பாறைகள் கூட கரையணும்

பெண்:
இரவு நேர நிலவிருளில்-கண்ணா
உன் விழிக்கதிர்தனில் காய்ந்திடணும்
உறவுகள் பல முன்னே நாம் நின்றே-என்றும்
உரிமையோடு பேசிடணும்

ஆண்:
சின்ன சின்ன ஊடல் கொண்டே-அதில்
செல்ல மனதின் ஏக்கம் கண்டே
உன்னை நானும் நெருங்கிடணும்-மறுகணம்
உயிரும் அன்பும் கலந்திடணும்

பெண்:
உன் குடும்பம் என் குடும்பமதில் இணைந்திடணும்
ஓர் கூடாக நாமும் சேர்ந்து சிரித்திடணும்
புதிய உறவுகள் பிறந்திடணும்-இங்கே
இனிமை பல வந்து சேர்ந்திடணும்

ஆண்:
இறந்த பின்பு என்ன வேண்டும்-உயிரே
இருக்கும் போதே சொர்க்கம் வேண்டும்-உன்னோடு
வாழ்ந்தே உயிரும் தேயவேண்டும்-உறவு
வாழ்வினெல்லைத் தாண்ட வேண்டும்

பெண்:
நரைதொட்டு வாழ்வின் கரைதொட்டும்- நான்
உன்னோடே சேர்ந்து வாழவேண்டும்
உலகை கைகோர்த்தே சுத்தவேண்டும்-அழகே
உயிர்த்துளி ஒவ்வொன்றையும் ரசிக்கவேண்டும்...

அறிமுகம்


வணக்கம் நான் தயா. முன்னாடி "அன்புத்தோழி தயா" என்ற வலைப்பதிவு வைத்திருந்தேன். ஆனால் எப்படியோ காணாமல் போய் விட்டது. சரி பறவாயில்ல என மறுபடியும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இருக்கிறேன். உங்க ஆதரவை எதிர்பார்த்தே. நன்றி.

குறிப்பு : நான் ஏற்கனவே எழுதியவையை மறூபடியும் படிக்க நேரிடும், தவறாக எடுக்கவேண்டாம்.