dimanche 7 octobre 2007

காதல் என்பது












காதல் என்பது...


இரவினில் நேரம் பார்ப்பது...
இசையினில் கனவு காண்பது...

தனிமையில் பேசி ரசிப்பது...
தனக்குள்ளே நினைத்து சிரிப்பது...

காத்திருந்து கரைந்தே போவது...
குறைகளை ஏற்க மறுப்பது...
பார்வையால் பேசிக்கொள்வது...
பார்த்ததும் பசி மறப்பது...

கவிதைகள் எழுதவைப்பது...
கண்ணாடி முன் காலம் போவது...

நிலவினில் முகம் தெரிவது...
நினைவுகளே வாழச்செய்வது...

1 commentaires:

a dit…

இரு முரன்பட்ட கருத்துகளை சொல்லிய விதம் அருமை