vendredi 26 octobre 2007

ஏன் உன்னை மட்டும்?



இன்னொரு தடவை
"ஏன் என்னை காதலித்தாய்" என்று கேட்டு
என்னை கவிஞன் ஆக்காதே






வார்த்தைகளால் கொட்டுவதோ
நான் உணர்வதில் பாதிதான்
மீதி சொல்லத்தெரியவில்லை
நீயே வந்து உணர்ந்து கொள்
நானாய்!





திரைப்படம் பார்க்கையில்
துளிர் விட்ட விழிநீர்
பேருந்து ஜன்னலில்
ரசனையோடு உன் முகம்
இடறிவிழுந்த போது
இக்கட்டில் கூட வரைந்த உன் நாணம்
இசையோடு சேர்ந்து
இணையும் உந்தன் கானம்
புன்சிரிப்பால் பரவி
பேசுகின்ற இயல்பு
இப்படி சிறு சிறு காரணங்களே
நான் உன்னை மட்டும் நேசிப்பதற்கு


2 commentaires:

a dit…

கனவு மெய்ப்பட வாழ்த்துகள்...

a dit…

இடறிவிழுந்த போது
இக்கட்டில் கூட வரைந்த உன் நாணம்..

வித்யாசமான கற்பனையில் நாணத்தை சொல்லிவிட்டீர்கள் ...
அழகாக இருக்கிறது

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு