jeudi 6 mars 2008

என்னிடம் சொல்வாயா?


நேராக வருவாயா?
உன் காதலைச் சொல்வாயா?
நானாக இருப்பேனா ? - இல்லை
நீயாகத் தெரிவேனா ?

கைகளால் விலங்கு பூட்டி.. -உன்
கண்களால் தூண்டில் போட்டு...
காதலைச் சொல்வாயா?
என்னிடம் சொல்வாயா?

இதுவரை எங்கிருந்து எனை வதைத்தாய்...நீ
இன்றுன் விழிகளிலே சிறை வைத்தாய்?

ஒரு நொடி உனை நான் பார்த்தால்..
உணர்வுகள் உறைந்தே தான் போகும்...
காதல் தேடிய கண்கள் இன்றுனைக் கண்டது...
காலமும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டது...

கண்ணில் விழுந்த மழைத்துளி நீதான்
நெஞ்சில் கலந்த இசைத்துளி நீதான்
என்னுள் படர்ந்த ஓவியம் நீதான்
நீதான்....நீயே தான்!!

உன் நினைவினில் தூங்கையில்
உளரல்கள் கூட கவிதை தான்
உன் நிஜம் எது...நிழல் எது...
இரண்டிலும் கலந்திட்ட குழப்பம் நான்
-...ம்ம் நானே தான்!

2 commentaires:

a dit…

தோழி தயாவிற்கு . . .

ஒரு அந்தி மாலைப் பொழுது
அலுவல் எல்லாம் முடிந்து
லேசாய்க் கிடந்தது மனசு.

கவிதை எழுதலாமா?
என்று யோசனை!

வேண்டாம்
கவிதை படிக்கலாம்
என்றது மற்றொரு யோசனை!

சரியென்று
வலைப்பூக்களில்
கவிதைப் பாக்களைத்
தேடிக் கொண்டிருந்த தருணம்.

தோழி உன் வலைப்பூவைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது.
படித்தேன். . .
ரசித்தேன்...
ருசித்தேன்...

மொத்தத்தில் உங்கள் கவிதை தேன்.

எனக்கும் கவிதையில் ஆர்வம் உண்டு.
குறிப்பாக காதல் கவிதையில் அலாதி ஆர்வம்.

உங்கள் கவிதைகளைப் படித்த போது என் சிந்தனையும், உங்கள் சிந்தனையும் ஒட்டி உரசிக் கொண்டது போல் ஒரு உணர்வு.

நெஞ்சை வருடும் காதல் உணர்வுகளை
அழகாய், மிக அழகாய்
எழுதியிருப்பது
அருமை.

என் எழுத்துக்களைப் பார்த்தது போல் உள்ளுணர்வு.

கவிதை தொடர்பான கருத்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்மாயிருக்கிறேன்
நீங்கள் அனுமதித்தால்.

நான் இப்போது தான்
எனக்கென்று ஒரு வலைப்பூவை
உருவாக்கி இருக்கிறேன்.
அதை
உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதில்
சக கவிஞனாய் பெருமைப்படுகிறேன்.

anbudaninbaa@blogspot.com

உங்களுக்கு நேரமிருந்தால் என் வலைப்பூ கவிதைகளைப் படித்து கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் கவிதைப் பயணம் தோழனின் வாழ்த்துக்கள்.

நன்றி

a dit…

கைகளால் விலங்கு பூட்டி.. -உன்
கண்களால் தூண்டில் போட்டு...
காதலைச் சொல்வாயா?
என்னிடம் சொல்வாயா?

நல்ல வரிகள் தோழியே ...
எளிமையான
வார்த்தைகள் கொண்டு
நல்ல ஒரு கவிதை ..

வாழ்த்துக்களுடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ...