
ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போய்
உதடுகளில் மறைத்து வைத்திருந்தும்
முடியாமல்...
கோழை ஆகி...
எனக்குள்ளே தவித்த நாட்களை
இன்று நினைக்க...
என்னையே நொந்து சிரிக்கிறேன்!
உண்மையான அர்த்தம் தெரியாமல்
உனக்காய் காத்திருந்து
வெறுமையாய் கழித்த தருணங்களை...
இன்று தேடி அலைகிறேன்
நான் இப்படி என்பதால் நீயும் அப்படியே என்று
கனவில் மட்டுமே வாழ்ந்திருந்தேன்!
ஆனாலும்...
அப்படி இருந்ததினாலோ என்னவோ
என் மீது பல மாற்றங்கள்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தேவையென எதையும் கேட்டதில்லை
இருந்தும்...
எனக்கேயான பாதையை நீ காட்டினாய்
சோகங்கள் வந்த போது
விலக கற்றுத் தந்தாய்
சுகங்கள் வந்த போது
ரசிக்கச் செய்தாய்
உன் நினைவில் வாழ்ந்த
"அந்த வருடங்கள்"
எவருக்கும் தெரியாவிட்டாலும்
எனக்குள் தந்த வருடலை...
இதுவரை சொல்ல நினைத்தும்
முடியவில்லை!
வெளியில் சொல்ல நினைத்தாலும்
வார்தைகள் ஏனோ சரியாய் இல்லை...
போகட்டும்!
நீ இருக்கும் போதே...
எவரிடமும் சொல்ல நினைத்தில்லை
இப்பொழுது மட்டும்!... ஏன்?
என்னுள்ளே மூழ்கிப் போன நினைவாய் நீ!
வெளியில் சொல்லும் போது...
எதையோ இழக்கிறாயே! ஏன்?
அதனால்...
எப்பொழுதும் புதைந்தே இரு!
ஒரு புதையலைப் போல.


2 commentaires:
அன்புத் தோழிக்கு!
வணக்கம்
தங்கள் மடல் கண்டேன் மகிழ்ச்சி.
எங்கேயோ பதுங்கிக்கிடந்த உங்கள் கிறுக்கலை பார்த்துப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்திருந்தீர்கள்.
உங்கள் கிறுக்கல் பதுங்கித்தான் கிடக்கிறது.
எங்கேயோ அல்ல
என்னைப் போன்ற
வலைப்பார்வையாளர்களின்
இதயங்களில் . . .
புதையல் நீ
கவிதை கண்டேன்.
களிப்புற்றேன்.
வாழ்க்கையில் சில
புதைந்துதான் இருக்க வேண்டும்.
கவிஞனுக்குள் கவிதையைப் போல்.
முத்துக்குள் சிப்பியைப்போல்.
மண்ணுக்குள் புதையலைப்போல்.
உங்களின் புதையலும்
பத்திரமாய் இருக்கட்டும்.
பார்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
மீண்டும் பின்னூட்டம் மூலம் சந்திப்போம்.
" புதையல் நீ" கவிதை
அருமை தோழியே ...
உள்மனத்தின்
ஆழத்தில்
எப்போதும் சில உண்மைகள் மறையாமல் புதைந்து கிடக்கும் ..
சில வேளைகளில்
அது வெளி வர முயற்சித்தாலும் நாமே மீண்டும் அதை புதைத்து விடுவோம் ..
அனைவருக்கும் ஏற்படும் ஒரு உண்மை கவிதையாக வந்திருக்கிறது ..
இனிமை
வாழ்த்துக்களுடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ..
Enregistrer un commentaire