dimanche 4 novembre 2007

காத(ற்)கொலை















உன் கதை கேட்ட போது

உணர்ச்சிவசப்பட்டவர்களில் நானும் ஒருத்தி
என்னதான் நீ அவளைக் காதலித்திருந்தாலும்
உன் காலத்தை முடிப்பதற்காய்
நீ எடுத்த முடிவு தவறே
உன் காதலை புரியவைக்கத் தெரியாத உன்னை என்னென்று சொல்ல
உன்னை புரிய முயற்சி செய்யாத அவளை என்னென்று சொல்ல
அதை விடு
காதல் வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமே
அதற்காக உன்னையே நீ அழிக்கத்துணிந்தாய்
ச்சீ...உன்னையே வாழவைக்கத்தெரியவில்லை
அதனால் அந்த துணிச்சல் கூட ஒரு கோழை தான்
நீ ஒரு நொடியில் எடுத்த முடிவால்
இன்று நொந்து கொள்பவர் எத்தனை பேர்
உன்னை விரும்பாத ஒரே காரணத்துக்காய்
ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் "அவள்"
உன்னையே வழி நடுத்தத் தெரியாமல் "நீ"
இதில் காதல் என்ன செய்யும் ?
அது வாழவைக்குமே தவிர சாகடிக்காது
உன் காதல் கிட்டவில்லை..சரி
உனக்காய் வாழப்பிடிக்கவில்லையா
உன் பெற்றோருக்காவது வாழ்ந்திருக்கலாம்
உணர்ச்சிகள் பொங்க உடன் எடுத்த முடிவு
நீ ஒரு நிமிடம் யோசித்திருந்தால்...
இன்று நான் எங்கேயோ இருந்துகொண்டு
உனக்காக பேனா பிடித்திருக்க நேர்ந்திருக்காது
உணர்ச்சிகளை வெல்லத்தெரியவில்லை நீ வீரனா ??
உன் போன்றவர்களின் கதை கேட்பது
இன்றே இறுதியாக இருக்கவேண்டும்

2 commentaires:

a dit…

காதல் தோல்வியினால் தற்கொலை செய்த காதலனைப் பற்றிய பதிவு. காதலி தானும் ஒரு காரணமோ அத்தற்கொலைக்கு என்ற குற்ற உணர்ச்சியில் பேசுவதாக உள்ள கவிதை. நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். வாழ்க

a dit…

னான் தமிலில் எலுதவே இவ்வலவு கச்ட படுகிரேன் ... நீங்க பெசுவதே கவிதைய இருக்கு .. அதுவும் அர்த்தம் உல்ல கவிதை... பராட்டுக்கள்