அப்போ கிறுக்கிய ஒன்று உங்கள் பார்வைக்கு.

என் தவறு எங்கே ??
ஏன் அன்று நான் பிறந்தேன்
இவர் காதல் விதையாக?
ஏன் இன்று நான் விரிந்தேன்
இரு சோக கிளையாக?
எந்தன் தவறு எங்கே... எங்கே?
திருமணத்தில் அன்று இணைந்து
இருமனமாய் இன்று பிரிந்தீர்...
வெறும் மனமாய் தவிக்கும் பிள்ளை
உங்கள் விழிதனிலே தேடுகிறேன்...
எந்தன் தவறு எங்கே.. எங்கே?
நேற்று வாழ்ந்தது தாயின் வீட்டில்!
நாளை வாழ்வது தந்தை வீட்டில்!
தனிக்குழந்தை நானோ
-எனக்கு
இரு மனைகள், புரியவில்லை!
எந்தன் தவறு எங்கே... எங்கே?
பிரிவின் காரணம் என்ன என்றால்
உரிமை என்று பதிலும் வருது!
எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்
எனது உரிமை இங்கு எங்கே...எங்கே?
எந்தன் தவறு எங்கே... எங்கே?


1 commentaires:
உங்களின் இந்த அழகான படைப்புக்கு எனது பாராட்டு!
Enregistrer un commentaire