
பேருந்தில்,
நெரிசலின் நடுவில்...
நீயும், நானும்...
ஒருவர் எதிரில் ஒருவராக...
ஒன்றாக...
சுவாசம் இரண்டும் ஒன்றையொன்று மோதிட...
தூண்டில் விழிகள் சண்டை போட்டு இழுக்க...
இடையிடையே சில வார்த்தைகள்...
பலதடவை இதழ்கள் மலர...
பேருந்து முழுவதும் ஏதேதோ சலசலப்பு
நாம் இருவரும் அமைதியில் தவழ...
ஆனாலும் பேசினோம்
பார்வையால்...
மௌனத்தால்...
தீண்டலால்...


2 commentaires:
உங்கள் தமிழுக்கு நான் அடி பனிகின்றேன்
கவிதைகல் பிரமாதம்
அழகான கவிதை
தொடர்ந்தும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
Enregistrer un commentaire