dimanche 22 novembre 2009

ஆத்தா நான் மீண்டும் வந்துட்டேன்...

ரொம்ப நாளுக்குப் பிறவு என் பதிவலையை கொஞ்சம் தூசு தட்டலாமுன்னு வந்து இருக்கேன்...

இதுவரைக்கும் எந்த வலைப்பதிவுலையும் போடாத பதிவு இது : ( அப்படி யாராச்சும் போட்டவங்க பத்தி தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்). உண்மையை சொல்லணும் என்றால் இந்த பதிவுக்கு தலைப்பு "மெகா சீரியல்" என்று வைத்திருக்க வேண்டும் : நல்லா ஏமாந்தீங்களா...வந்துட்டீங்கல்ல...தொடர்ந்து படியுங்க!


இப்போ எல்லாம் புதுசா நான் ஒரு உலகத்தை ரசிக்க ஆரம்பிச்சு இருக்கேன் : அது தான் ASIAN DRAMAS.
என்ன பெருசா எங்க மெகா சீரியலை விட புதுசா இருக்கப்போகுது என்று தப்புக்கணக்கு போட்டுடாதீங்க...உண்மையை சொல்லப்போனால் ஆசியாவில் உள்ள தென்கொரியா, ஜப்பான், தாய்வான் நாடுகளில் திரைப்படங்களை விட இந்த "Mini-Dramas" தான் பிரபல்யமானவை... அழகானா கதைகள், அருமையான நடிகர்கள்...என்று எங்களுக்குத் தெரியாமல் நிறைய ஒழிந்திருக்கின்றன இங்கு.
எனக்குப் பொதுவாக மற்ற நாடுகளையும் விட, தென்கொரியா Dramaக்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்!

அதில் மிகவும் பிடித்த ஒன்று Coffee Prince

























என்னவென்று சொல்வது, எப்போதாவது கொஞ்சம் கவலையாக இருந்தேன் என்றால், இதில் சில காட்சிகளைப் பார்த்தால் போதும்...மறுபடியும் சிரிக்க ஆரம்பித்து விடுவேன்...







ஒன்றே ஒன்று மட்டும் சொல்றேன் : எல்லா காட்சிகளையும் அணு அணுவாய் ரசித்து எடுத்திருப்பார்கள்! :) பார்க்க விரும்பினீர்கள் என்றால் இங்கே அழுத்துங்கள்.

0 commentaires: